சேவ் சக்தி என்ற அமைப்பினை நிறுவி அதன் மூலம் பல சேவைகளை செய்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். இவருடைய அப்பா திரைத்துறையில் இருப்பது பற்றி தெரிந்தும் தன்னிடம் சில்மிஷம் செய்த ஒருவரை பற்றி தைரியமாக அனைவரிடமு் கூறினார் வரலட்சுமி. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேவ் சக்தி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துக்கொண்டு பேசினார் வரலட்சுமி.

எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல செயல்களை கற்று தரவேண்டும் என்ற கூறினார் மேலும் வருங்கால தலைமுறையினருக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று வரலட்சுமி வலியுறுத்தினார். அதுபோல கணவன் தன் மனைவியை அடித்தால் மனைவியும் கணவனை திருப்பி அடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பிரச்சனைகள் அதிகமாக இருப்பதாக கூறிய வரலட்சுமி பெண்கள் பாதுகாப்புடன் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் பலவற்றையும் வழங்கினார்.அவா்களுக்கு உணவு பரிமாறினார். பின் அவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில் வரலட்சுமி பேசிய கணவனை திருப்பி அடிக்க வேண்டும் என்பதை வைத்து நம்ம நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா். இவரும் வாரிசு நடிகரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. இந்நிலையில் இவரது பேச்சை கேட்ட அந்த நடிகருக்கும் கொஞ்சம் பயம் வந்திருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

thanks to polimer