தனுஷ் நடித்து வரும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் பாலாஜி மோகன் திட்டமிட்டபடி நடத்தி கொண்டு வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வரலட்சுமியின் கேரக்டர் குறித்த தகவல் லீக் ஆகியுள்ளதாம்

வரலட்சுமி இந்த படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்து வருவதாகவும், ஊரே பயப்படும் தாதா கேரக்டரில் நடிக்கும் தனுஷ், கலெக்டரை பார்த்து நடுநடுங்கும் வகையில் வரலட்சுமியின் கேரக்டர் உருவாகியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

அதேபோல் வரலட்சுமிக்கு நேர்மாறாக இந்த படத்தின் ஹீரோயின் சாய்பல்லவி ஒரு அப்பாவி பெண் கேரக்டரில் நடித்து வருவதாகவும் தெரிகிறது.

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.