சூப்பர் நடிகர் சரத்குமாரின் மகளும், விஷாலின் காதலி என்று சொல்லப்படுபவருமான வரலட்சுமி, தனுஷின் அடுத்த படமான ‘மாரி 2’ படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘மாரி’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவரே நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென இன்று வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரலட்சுமியின் வரவால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதேபோல் இந்த படத்தில் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு நபர் இசையமைப்பாளர் அனிருத். ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே