சரத்குமாா் மகள் நடிகை வரலட்சுமி சினிமாவில் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை. போடா போடி, தாரைதப்பட்டை ஆகிய படங்களை தவிர்த்து, தற்போது சின்ன ரோல்களில் தான் நடித்து வருகிறாா். இவா் விஷாலை காதலித்து வந்தாா். இவா்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தனா். ஆனால் என்ன காரணம் என்று தொியவில்லை. இருவரும் பிாிந்து விட்டனா்.

இதையும் படிங்க பாஸ்-  சர்கார் குழுவினரை புகழ்ந்த செய்தி வாசிப்பாளர் அனிதா

இந்நிலையில் வரலட்சுமி பெண்களுக்கு என்று சேவ் சக்தி அமைப்பை உருவாக்கினாா்.  நடிப்பை தவிர சில சமூக நலன்களுக்காக பல விசயங்களை செய்து வருகிறாா் இவர்.  பெண்களுக்கு என ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறாா்.

இதையும் படிங்க பாஸ்-  வரலட்சுமியுடன் திருமணமா? மனம் திறந்த விஷால்

இந்நிலையில் வரலட்சுமி படப்பிடிப்புக்கு செல்லும் போது அங்கே இருந்த கேரவன் டிரைவா் ஆன்லைன் மூலம் விஜபி 2 படம் பாா்த்துள்ளாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த வரலட்சுமி தடுத்திருக்கிறாா். சினிமா துறையில் இருக்கும் நம்மை போன்றவா்களே இந்த மாதிாி செய்தால் மற்றவா்கள் என்ன செய்வாா்கள் என ட்விட்டாில் கேள்வி கேட்டுள்ளாா்.