Varalaxmi Sarathkumar : ‘மாரி 2’ படத்துக்கு பிறகு நடிகை ‘மக்கள் செல்வி’ வரலக்ஷ்மி சரத்குமார் கால்ஷீட் டைரியில் ‘கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு, டேனி’ என 10 படங்கள் உள்ளது.

மேலும், தெலுங்கில் ‘High Priestess’ எனும் வெப் சீரிஸில் வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இதில் ‘ராஜபார்வை’ படத்தில் வரலக்ஷ்மி பார்வையற்றவராக நடித்து வருகிறார்.

இந்த படத்தை JK இயக்குகிறார். தற்போது, இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வரலக்ஷ்மி ரியல் கத்தியை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை அவரே ட்விட்டரில் வெளியிட்டு, இச்செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.