நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பாமக அன்புமணி வரை இந்த விஷயம் போய், அந்த காட்சியை அந்த போஸ்டரை நீக்க வேண்டும் என சொல்லி படக்குழுவினரையே நீக்க வைத்து விட்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  சர்காரை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி! அதிரும் அரசியல்!

இந்நிலையில் நேற்று வெளியான வர்மா டீசரிலும் பயங்கர கெத்தாக விக்ரம் மகன் துருவ் சிகரெட் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக நடப்பது போன்று டீசர் வெளியாகி உள்ளது.

சிகரெட் பிடிப்பதை தடை செய்ய கோருவது எல்லாம் பெரிய நடிகர்களுடன் மோதி விளம்பரத்துக்கு செய்வதுதானா, இது பற்றி எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்களா என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.