பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் வர்மா. விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இதை பாலா தமிழுக்கேற்றவாறும் அவர் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளார் என்பது நேற்று வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தெரிந்தது. பாலா படம்னா ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் பாலா படம்னா இப்படித்தான் வன்முறை, கரடு முரடு ஹீரோ, ஹீரோயின் என வழக்கமான நடைமுறைகளும் ரசிகர்களுக்கு சற்று எரிச்சலாக உள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட போஸ்டர் அர்ஜூன் ரெட்டி போஸ்டர் போல் ரொமாண்டிக்காக இல்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது.  இந்த நிலையில் இந்த படத்தின் டீசரும் முன்பே அறிவித்தபடி இன்று வெளியிடப்படுகிறது. டீசரை வைத்து பார்க்கும்போது அத்தகைய ரொமாண்டிக் காட்சிகள் படத்தில் உண்டு என்பது தெரிகிறது. வெறும் போஸ்டரை வைத்து சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள் வந்தது குறிப்பிடத்தக்கது.