இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள வர்மா படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தை தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. அதே நேரம், டீசர் மொக்கையாக இருந்தது. ஆனால், டிரெய்லரை பார்க்கும் போது பாலா மிரட்டி விட்டார். விக்ரம் மகன் துருவ் நடிப்பு பிரமாதம் என நெட்டிசன்கள் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.