தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவும், நியாயமான விசயங்களை பேசுவதற்காகவும் மக்களோடு மக்களாக பலருடன் விவாதிக்கும் வகையில் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி உருவாகிறது. வரலட்சுமி சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு நடுவர் போலவும் இருப்பார் என தெரிகிறது.

உன்னை அறிந்தால் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி சமூக மாற்றத்திற்கான நிகழ்ச்சி என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 14 முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.