பொதுநலன் கருதி பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வசந்தபாலன் கூறிய கருத்துகள் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் புதிய திரைப்படங்கள் வெளியான அதே நாள் அல்லது அடுத்த நாள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்து விடுகிறது.

இந்நிலையில், பொதுநலன் கருதி பட டிரெய்லர் வீடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வசந்தபாலன் “சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களே கிடைப்பதில்லை. பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளது. ஆனால், காலையில் தியேட்டருக்கு போனால் படம் இல்லை. இந்த 2 படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்கிறது? இதை ஒழிக்கிறோம் எனக்கூறித்தானே பதவிக்கு வந்தார்கள். தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடியுங்கள். இல்லையேல் தமிழ் திரையுலகை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்” என கோபமாக பேசினார்.