Connect with us

செய்திகள்

நேர்கொண்ட பார்வை பார்த்து குற்ற உணர்ச்சி ஏற்பட்டது – வசந்த பாலன் உருக்கம்

Published

on

Vasantha Balan NKP Review – நேர்கொண்ட பார்வை திரைப்படம் பற்றி இயக்குனர் வசந்தபாலன் உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் தனது முகநூலில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிங்க் திரைப்படம் வெளியான நாளிலிருந்து நான் செல்லும் திசையெங்கும் அதனைப்பற்றி பேசியிருக்கிறேன்.புகழ்ந்திருக்கிறேன்.ஒரு திரைப்படம் என்ன செய்யும்? சமுதாயத்திற்கு என்ன செய்து விடமுடியும் என்கிற சமூகத்தின் கேள்விகளுக்கு நோ என்கிற பதிலை திரைப்படம் பெண்கள் சார்பாக சொல்லமுடியும் என்று ஆணித்தரமாக நிருபித்த திரைப்படம்.டெல்லி மற்றும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு என் சுற்றியுள்ள சமூகம் பெண்கள் மீது தான் பழி சொற்களை உதித்த வண்ணம் இருந்தது.அதற்கு சரியான பதில் “நோ”. இந்திய சமூகத்தின் பண்பாட்டு தளத்தின் மீது ஏறி உரக்க அதன் கறைகளை களைகிற ஒரு சொல் .

இந்த திரைப்படம் தமிழில் அதுவும் அஜீத்குமார் அவர்கள் நடிக்க தயாராகப்போகிறது என்ற செய்தியை அறிந்தேன்.நல்ல முயற்சி தான் ஆனால் அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யும் என்கிற கேள்வி இருந்தது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்னோட்டத்தில் சண்டைக்காட்சியை பார்த்த போது இயக்குநர் விநோத் அவர்கள் இதை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்று அறிய ஆர்வமானேன். வேலைப்பளு காரணமாக நேற்றிரவு தான் படத்தைப்பார்த்தேன். வீட்டு உரிமையாளரை,அந்த பெண்களை தொந்தரவு செய்யும் பணபலம் மற்றும் அதிகார பலம் படைத்த கும்பல் வக்கீலையும் தொந்தரவு செய்யும் தானே? அப்படி தொந்தரவு செய்கையில் ஒரு சண்டைக்காட்சி வரும் தானே. அஜீத் அவர்களுக்காக செய்த திணிப்பின்றி மிக சரியாகப் பொருந்துகிறது.திரையில் ரசிகர்களின் விசில் பறக்கிறது.

பிங்க் படத்தை பலமுறை பார்த்த போதும் நமக்கு ஏன் இந்த இடம் தோணாமல் போனது. ரீமேக் ஆகிறது என்ற போதும் எல்லோரையும் போல நாமும் ஏன் சந்தேக கண்களுடன் பார்த்தோம் என்ற குற்ற உணர்ச்சியும் தாழ்வு மனபான்மையும் ஏற்பட்டது.
தொடர்ந்து கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த அஜீத் இது போன்ற படங்களிலும் நடிக்க முன்வருவது மிக ஆரோக்கியமானது. சிறப்பானது. பாராட்டுக்குரியது. இயக்குநர் விநோத் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

செய்திகள்25 mins ago

கமலைச் சந்தித்த பிராவோ – பின்னணி என்ன ?

simbu
செய்திகள்41 mins ago

ஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

செய்திகள்52 mins ago

மொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

செய்திகள்1 hour ago

இந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா !

ஜோதிடம்3 hours ago

இன்றைய ராசிபலன்கள் 12.12.2019

police
செய்திகள்12 hours ago

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)

rajini
செய்திகள்12 hours ago

குஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா!. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

செய்திகள்14 hours ago

ஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்3 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending