‘பாகுபலி 2’ படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ். வாட்டாள் நாகராஜ்

12:49 மணி

பாகுபலி 2′ படத்தில் நடித்திருந்த சத்யராஜ் நேற்று கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்ததை அடுத்து இந்த படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு காவிரி பிரச்சனைக்காக நடந்த ஒரு கூட்டத்தில் கன்னட மக்களை கடுமையாக விமர்சனம் செய்த சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ‘பாகுபலி 2’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். மேலும் சத்யராஜின் கொடும்பாவி எரிப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு நடத்தியது.

இதனையடுத்து ‘பாகுபலி 2’ படத்தின் நன்மை கருதி நேற்று சத்யராஜ் ஒன்பது வருடங்களுக்கு முன் பேசிய தனது கருத்துக்கு நேற்று வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், அதே நேரத்தில் இனிமேல் சத்யராஜ் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393