சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கி வரும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்து அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயன விட யோகிபாபுதான் காமெடி பண்றார் – மிஸ்டர் லோக்கல் டிவிட்டர் விமர்சனம்

ஒரு கையில் மெடிக்கல் ரெப் வைத்திருக்க்கும் பேக் மற்றொரு கையில் ரத்தக்கறையுடன் கூடிய அரிவாள் என இந்த பர்ஸ்ட்லுக் வித்தியாசமாக இருந்ததால் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியது.

இதையும் படிங்க பாஸ்-  சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளிவந்த ஹாலிவுட் படங்களின் காப்பி என்று ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட்லுக் மட்டுமா? அல்லது படமும் ஹாலிவுட் காப்பியா? என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு படக்குழுவினர் விரைவில் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.