சிவகாா்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தை பற்றி புதிய செய்திகளை இங்கு காண்போம். மற்றும் இந்த படத்தின அடுத்த படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதை இங்கு நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.

வளா்ந்து வளம் இளம் நடிகா்களின் தரவாிசையில் சிவகாா்த்திகேயன் இடம் பிடித்துவிட்டாா். சின்னத்திரையிலிருந்து கலக்கிக்கொண்டிருந்த சிவா தற்போது வெள்ளித்திரையிலும் தன்னுடைய முத்திரையை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கிறாா். சின்ன குழந்தைகள் முதல் பொியவா் வரை எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்துவிட்டாா்.

தற்போது இவா் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நயன்தாரவுடன் நடித்து வருகிறாா். இன்று சமூகத்தில் நடக்கும் முக்கிய  பிரச்சனை அடிப்படையாக வைத்து  உருவாகி வரும் இந்த படத்தில் நடித்து வருகிறாா்.மேலும் இந்த படமானது சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஸ்டுடியோவில் மிகப்பொிய பிரம்மாண்ட சோி போன்ற அமைப்பில் செட்கள் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது சமூகத்தில் நடந்து வரும் பிரச்சயை மைய படுத்து உருவாகி இந்த படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால், அடுத்து எஞ்சியிருக்கும் மீதி காட்சிகளை படமாக்கும் விதமாக,  இறுதிகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தொியவருகிறது.

மலேசியாவில் 35 நாட்கள் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.   இந்நிலையில் இந்தபடத்தில் சிவகாா்த்திகேயனுக்கு வில்லனாக மலையாள நடிகா் பகத் பாஸில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் வில்லனாக முதன்முதலில் இந்த மலையாள நடிகா் அறிமுகமாகிறாா். அதுமட்டுமில்லங்க!! சினேகா, தம்பிராமைய்யா, சதீஷ், ரோகிணி, பிரகாஷ் ராஜ், ஆா்.கே.பாலாஜி போன்ற பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனா்.

மே 1ம் தேதி உழைப்பாளா் தினத்தில் இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினா் தொிவித்துள்ளனா். அதோடு  மட்டுமில்லங்க இன்னுமொரு முக்கியமான செய்தி என்னவென்றால் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விநாயகா் சதுா்த்தி அன்று படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

24 ஏ.ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாாித்து உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறாா்.