சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு நாளை முதல் ரிசர்வேஷன் தொடங்குகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. இதில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 159 நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள்.

படத்தின் நீளம் சிறிது அதிகமாக இருப்பதாகவும், சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் ரிலீசுக்கு பின்னர் அதிருப்தி காரணமாக நீளம் குறைக்கப்பட்டதாகவும், அந்த நிலைமை வேலைக்காரனுக்கு வருமா? என்றும் கோலிவுட் திரையுலகினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் மோகன்ராஜா படத்தினை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருப்பார் என்றும் நீளம் ஒரு குறையாக இருக்காது என்றும் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்