நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் வேலைக்காரன் படத்தில் குடிமகன்களை குறிவைத்து ஏராளமான காமெடி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

தனி ஒருவன் வெற்றிக்குப்பின் இயக்குனர் ராஜா இயக்கி வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸாகவும், அவருடன் எப்போதும் உடனிருக்கும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் குடிமகன்களை கிண்டல் செய்யும் படி எராளமான காட்சிகள் இடம்பெறுகிறதாம். அதாவது, காலையில் டாஸ்மாக் திறந்ததும், யார் முதலில் சரக்கு வாங்கி வருகிறார்களோ, அவர்களுக்கு 10 சரக்கு பட்டில் இலவசம் என அறிவிப்பார்களாம்.

எனவே, அந்த பத்து பாட்டிலை வாங்குவதற்காக ஏராளமானோர் டாஸ்மாக் திறக்கும் முன்பே கூட்டமாக போய் நின்று, கடை திறைந்ததும், மல்லுக்கட்டி கடையின் கம்பி கேட்டுக்குள் கையை நுழைத்து நீ, நான் என அடித்து, பிடித்து சட்டை கிழிந்து, கையில் ரத்தக்கறைகளோடு சரக்கு பாட்டிலுடன் வருவார்களாம. இந்த காட்சியை ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் படி எடுத்துள்ளாராம் இயக்குனர் ராஜா. இந்த காட்சிகளில் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் காமெடி செய்து அசத்தியுள்ளனராம்.