போஸ்டரில் பகத் பாசில் பெயரை சேர்க்காத சிவகார்த்திகேயன்

08:27 காலை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா, பகத் பாசில் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் இப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகும் என்று தெரிகிறது. வேலைகாரன் படத்தில் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அதில் சிவகார்த்திகேயனும், பகத் பாசிலும் இடம்பெற்றிருந்தனர். அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் என்று அச்சிடப்பட்டிருந்தது.

Loading...

பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு சீனியர். அப்படியிருக்க வேலைக்காரன் போஸ்டரில் அவரது பெயரும் இடம்பெற செய்ய வேண்டாமா என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் பெயராக இல்லை என்றாலும் சிவகார்த்திகேயன் – பகத் பாசில் நடிக்கும்  என்று போஸ்டர்களில் இடம்பெற செய்தால் அவருக்கு உரிய மரியாதையை வழங்குவதாக இருக்காதா? இதனை சிவகார்த்திகேயன் பரிசீலிப்பாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மோகன் ராஜாவின் முந்தைய படமான தனி ஒருவனில் அரவிந்த் சாமியின் பெயரையும் போஸ்டரில் இடம் பெற செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com