வேலைக்காரன் 2வது லுக் வெளியீடு

சிவகார்த்திகேயன்  நடித்த வேலைக்காரன் படத்தின் இரண்டாம் லுக் இன்று வெளியானது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில்  வேலைக்காரன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. தனி ஒருவன் மாபெரும் வெற்றிக்குபின் மோகன் ராஜா இயக்கும் இந்த படம் வரும் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு கையில் பெட்டி இன்னொரு கையில் அரிவாளுடன் சிவகார்த்திகேயன் நிற்பது போன்ற முதல் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இன்று  2வது லுக் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனுடன் முதன்முதலாக ஃபகத்பாசிலும் உள்ளார். இன்று பகத்பாசிலின் பிறந்த நாள் என்பதால் இந்த போஸ்டரை வேலைக்காரன் படக்க்குழு வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.