எண்பதுகளில் பல்வேறு காமெடி ரோல்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வெள்ளை சுப்பையா, ஏண்டாப்பா திரும்ப திரும்ப திரும்ப பேசற நீ என்று வடிவேலோடு பேசி கீழே விழுவாரே அவர்தான் வெள்ளை சுப்பையா.

கவுண்டமணி உள்ளிட்டோருடன் பல படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார், வைதேகி காத்திருந்தாள், நேசம் புதுசு உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உயிரிழந்தார்.