வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22

மூன்று நாயகிகளுடன் ‘பார்ட்டி’யை ஆரம்பித்த வெங்கட்பிரபு-பிரேம்ஜி

12:55 மணி

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு ‘பார்ட்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்கள் நடிக்கவுள்ளனர்.

வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களுக்கும் இசையமைக்கும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி இசையமைக்கின்றார். ஆனால் இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கில் மதுபாட்டில்களின் பெயராக இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393