வெங்கட்பிரபு தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் நாளை டீசர் வெளியானவுடன் தொடர்ச்சியாக டிரைலர், பாடல் வெளியீடு, உள்பட அனைத்து புரமோஷன்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘வடகறி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும், விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம் டிசைனும் செய்து வருகின்றனர். இந்த படத்தை சர்வண ராஜன் இயக்கி வருகிறார்.