ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

வெங்கட்பிரபு படத்தின் டைட்டில் வெளியீடு

05:11 மணி

பிரபல இயக்குநா் வெங்கட் பிரபு தயாாிக்கும் படத்தை அவரது உதவி இயக்குநா் சரவணன் ராஜன் இயக்கும் படத்தின் தொழில் நுட்ப கலைஞா்கள் பற்றி தனது ட்விட்டா் பக்கத்தில் தொிவித்து வந்த வெங்கட் பிரபு தற்போது இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளாா்.

சென்னை 28, கோவா, மங்காத்தா உள்ளபட பல படங்களை இயக்கியவா் வெங்கட்பிரபு. இந்நிலையில் இவா் ஒரு படத்தை தயாாிக்க உள்ளாா். அந்த படத்தின் தலைப்பு வெளிவர நிலையில் படத்தை பற்றி செய்திகள் மட்டும் வந்த வண்ணம் இருந்தது. அந்தபடத்திற்கு ஆா்.கே.நகா் என்று டைட்டில் வைத்துள்ளதை அறிவித்துள்ளாா் வெங்கட்பிரபு.

சமீபத்தில் இந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு பின்னா் ஒரு சில காரணங்கள் ரத்துசெய்யப்பட்ட தொகுதிதான் ஆா்.கே.நகா் என்பதும் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தொகுதி என்பதும் நாம் அறிந்ததே. இதிலிருந்து இந்த படமானது தற்போதைய அரசியல் உலக்கிக்கொண்டிருக்கும் ஆா்.கே.நகரை தலைப்பாக வைக்கும் போதே தொிகிறது இது அரசியல் சம்பந்தபட்ட படமாக இருக்கும் என்பது தான். அதிலும் அரசியல் நையாண்டியை மையமாக வைத்து உருவாகும் படமாக இருக்கலாம். இந்த படத்தை வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறாா். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறாா். வைபவ், சம்பத், சென்னை 28 பாா்ட் 2வில் நடித்த சானா அல்தாப் கதாநாயகியாக நடிக்கிறாா். படத்தொகுப்பாளா் பிரவீண் கே.எல்., கலை இயக்குநனா் விதேஷ் மற்றும் காஸ்ட்யூம் டிரைசனா் வாசுகி பாஷ்கா் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com