தெலுங்கில் வெற்றியை வாரிக்குவித்த ‘100% Love’ என்ற படம் தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘100% காதல்’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் வெற்றியை சுவைத்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் கதாநாயகி. இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.எம்.சந்திரமௌலி இயக்குகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ஜிவி பிரகாஷுடன் இணையும் தனுஷின் இரண்டு ஹீரோயின்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று காலை 10.45 மணிக்கு வெளியிடவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் லண்டனில்தான் படமாகவுள்ளதாம். ஜி.வி.பிரகாஷின் படமொன்று வெளிநாட்டில் படமாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  'வாட்ச்மேன்' படத்தின் திகிலுாட்டும் டீசர்!

இப்படத்தை கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.