விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘மதுரவீரன்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதன்முதலாக பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விரைவில் விஜயகாந்த் மற்றும் சண்முகப்பாண்டியன் நடிப்பார் என்ற தகவலை அவர் தெரிவித்தார்.

விஜயகாந்த் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய ‘நிறைஞ்ச மனசு’ படத்தில் வெங்கட்பிரபு ஒரு சிறு கேரக்டரில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.