சில நாட்களாக சிம்புவை வைத்து வெங்கட் பிரபு புதிய படம் ஒன்று இயக்க இருப்பதாகவும் அது மங்காத்தா 2 தான் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வெங்கட் பிரபு டிவிட்டர் பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் டிவிட்டர் பதிவில் “ஆம், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த படத்தில் சிம்புவுடன் இணைகிறேன், சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார், புதிய கதையுடன் 2019 ஆண்டு தயாராகிறது. எந்த ஒரு படத்தின் இரண்டாம் பாகமும் இல்லை. விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே வெங்கட் பிரபு இயக்க இருக்கும் 9வது திரைப்படம் மங்காத்தா 2 திரைப்படம் இல்லை, புதிய கதை என்பது உறுதியாகியுள்ள நிலையில் அது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.