கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் இயக்க விஷ்ணு விஷால், அப்புக்குட்டி, பரோட்டா சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர் படமும் பெரும் வரவேற்பை பெற்றது இந்நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

இம்முறை இப்படத்தை இயக்குவது சுசீந்திரன் அல்ல ஒரிஜினல் கதையை அடிப்படையாக கொண்டு புதிய திரைப்படத்தை செல்வசேகரன் என்பவர் இயக்குகிறார்.

முதல் படத்தின் ஹீரோ ஹீரோயின் மட்டும் மாற்றப்பட்டு விக்ராந்த், அர்த்தனா பினு நடிக்க கிஷோர், சூரி, அப்புக்குட்டி போன்றோர் திரும்பவும் இரண்டாம் பாகத்திலும் தொடருகின்றனர்.