தமிழ் சினிமாவில் தனக்கென காமெடியில் தனி முத்திரை பதித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்கள்.

திரு ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமாகமானவர். ப்ளாக் ஒயிட் படங்களில்

இவர் புகழ்பெற்றதை விட எண்பதுகளுக்கு பின் வந்த படங்களில்தான் இவர் புகழ்பெற்றது அதிகம்.

டேய் மம்ப்ட்டி என்று இவர் அழைப்பதாகட்டும், வயித்தை தட்டிக்கொண்டு புர்ர் என சொல்வது

வாயை வைத்து சைகை மூலம் பஃப் பஃப் என அழைப்பது என வித்தியாசமான கோணங்கி சேட்டை நகைச்சுவைக்கு சொந்தக்காரர்.

தமிழ்ப்படம் 1ல் சிவாவுக்கு நண்பராக நடித்து காமெடி செய்தார் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்கு பிறகு இவர் நடிக்கவில்லை.

இவர் அந்தக்கால நடிகை மணிமாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவி மணிமாலாவுடன் சேர்ந்து எளிமையாக தனது 80வது பிறந்தஇன்று நாளை கொண்டாடினார்.