வினுசக்கரவர்த்தி மரணம்: மூன்று வருட போராட்டம் முடிவுக்கு வந்தது

கரகரப்பான குரலுக்கு சொந்தக்காரர், கருகருவென இருந்தாலும் பார்த்தவுடன் சிரிப்பு வரும் வகையான நடிப்பு, வில்லனுக்கும் உகந்த உருவம் என தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு தலைமுறை நடிகர்களுடன் நடித்த வினுசக்கரவர்த்தி சற்றுமுன் காலமானார்.

70 வயதான வினுசக்கரவர்த்தி கடந்த மூன்று வருடங்களாக உடல்நலமின்றி போராடி வந்த நிலையில் இன்று அந்த போராட்டம் முடிவுக்கு வந்து அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த வினுச்சக்கரவர்த்திக்கு கர்ணப்பூ என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். வினுசக்கரவர்த்தியின் உடல் அவரது சாலிகிராமம் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோலிவுட் திரையுலகினர் வினுசக்கரவர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.