வித்யுலேகா ராமன் பிரபல குணச்சித்திர மற்றும் சீரியல் நடிகருமான மோகன்ராம் என்பவருடைய மகள். வித்யுலேகா முதன் முதலில் ஜீவா நடிப்பில் இயக்குநா் கௌதம் மேனன் இயக்கி நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் அறிமுகமானவா். இவா் இந்த படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதனை தொடா்ந்து பல படங்களில் காமெடி நடிகையாக நடித்தார். இவா் குண்டாக இருப்பதால் காமெடி ரோல் தான் அதிகமாக இவரை தேடி வந்தது.

பவர் பாண்டி படத்தில் கூட தனுசின் முறைப்பெண்ணாக நடித்திருந்தார். அதிலும் மடேனா செபஸ்டின் தோழியாக நடித்திருந்தார். குண்டு பெண்ணான இவருக்கு காமெடி கதாபாத்திரமும் ஹீரோயினுக்கு நண்பியாக நடிக்கும் வாய்ப்புகள் தான் அதிகம் தேடி வந்தது. அதனால் கிடைத்ததை நழுவ விடாமல் அதிலும் தன்னுடைய தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அதிக படங்களில் நடித்து முத்திரை பதித்தார். இவா் ஏற்கனவே நானும் கவா்ச்சியாக தான் இருக்கிறேன் என்று கூறி தனது கவர்ச்சியான உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து தன் திறமையை வெளிபடுத்தினார். இதனால் இவருக்கு தெலுங்கில் ரன் ராஜா ரன் படத்திற்காக சிறந்த காமெடி நடிகை என்ற விருதை பெற்றார்.

தற்போது இவா் ஸ்ரீநிவாஸா கல்யாணம் என்ற படத்தில் நடித்து வரும் வித்யுலேகா ராமன் தன் தலைமுடியை வெட்டி இருக்கிறார். அந்த படத்திற்காக முடியை வெட்டி புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. குண்டாக இருந்தாலும் நானும் கவா்ச்சியாகத்தான் இருக்கிறேன் என்று கூறி கவா்ச்சியான உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியவா். இவரின் தற்போதைய புதிய கெட்டப்பை பார்த்து ரசிகா்கள் கலவையான விமா்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் வித்யுலேகா புதிய ஹேர் கட் அலங்காரத்தை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் நடிக்சை சமந்தா தனது ஹேர் ஸ்டைலை மாற்றினார். இது வைரலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது