Vignesh Shivan – பாட்டில் மூடி சவாலை இயக்குனர் விக்னேஷ் சிவன் முயற்சி செய்து பல்பு வாங்கியுள்ளார்.

ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் நடிகர் ஜேசன் ஸ்டதம் தொடங்கி வைத்ததுதான் இந்த பாட்டில் மூடி சவால். அதாவது காலை சுழற்றி தனக்கு முன்னாள் வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலின் மூடிய மட்டும் கழற்றி விட வேன்டும் என்பதுதான் அந்த சவால். இதை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர, பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்களிடையேயும் இந்த ஆர்வம் தொற்றியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் அதை செய்து தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் முயற்ச்சிக்கிறேன் என முயற்சி செய்து பல்பு வாங்கியுள்ளார். அவரால் காலை தூக்கி பாட்டிலின் மூடியை திறக்க முடியவில்லை. எனவே, கையாலேயே திறந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் ‘உனக்கெல்லாம் நயன்தாராவா?”.. என சிலரும்… காலை நல்ல தூக்குங்க புரோ.. என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.