டோரா படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் – கடுப்பான விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதை, இயக்குனரும், நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் விமர்சித்துள்ளார்.

நயன்தாரா நடித்து வெளியான ‘மாயா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே, நயன்தாரா மீண்டும் தற்போது டோரா என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஏராளமான திகில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் “ துருவங்கள் 16 மற்றும் மாநகரம் ஆகிய படங்களுக்கு ‘யுஏ’ சான்றிதழ் அளித்த தணிக்கை குழுவினர், டோரா படத்திற்கு ஏ சன்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை குழுவினர் மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.