லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து நெருக்கமாக இருந்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்து வருகின்றனர். நயன் இரண்டும் காதலும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே.

இவா்கள் இருவரும் அவ்வப்போது வெளிநாடு பறந்து செல்வது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. அப்படி இருவரும் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றாலும், பிறந்த நாளை கொண்டாட சென்றாலும் அங்கு எடுக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவார். தற்போது நயனும், விக்னேஷ் சிவனும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நயன் மற்றும் விக்னேஷ் சிவன் காதல் ஜோடி அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இன்டியோ பகுதியில் பிரபல கோச்செல்லா இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த மியூஸிக் ஃபெஸ்டிவலில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ். காதல் ஜோடிகள் எப்ப அமெரிக்கா சென்றாலும் அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை தனது இணையத்தள பக்கத்தில் வெளியிடுகிறார் விக்கி.

நயன்தாரா கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பேக் டூ ஓர்க், சம்மர் வெகேஷன் முடிந்தது, ஒர்க் மோட் என பதிவிட்டுள்ளார்.