கோலமாவு கோகிலா சூப்பர் ஹிட் படத்தை அடுத்து நயன்தாரா நடித்து வெளிவந்திருக்கும் படம் இமைக்கா நொடிகள். ஆதர்வா,விஜய் சேதுபதி,அனுராக் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கேடிஎம் சிக்கல் காரணமாக இப்படம் தமிழகத்தில் பல இடங்களில் வெளியாகவில்லை. வெளிநாட்டிலும் இதே நிலைதான்.

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் டுவிட்டரில் விமர்சனம் எழுதியுள்ளார். அதில் அருமையாக இயக்கப்படுள்ள திரில்லர் படம். அனுராக் நடிப்பு வாவ் விஜய் சேதுபதி மீண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆதர்வா ஸ்மார்ட்டாக இருக்கிறிர்கள் என்று பாரட்டியுள்ளார். இதில் நயந்தாராவின் நடிப்பு குறித்து அவர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.