ரஜினி படத்தின் இடத்தை பிடித்தது ‘தளபதி 61’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே லைகா நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளிவரவுள்ளது. கிராபிக்ஸ் பணிகளின் தாமதமே ரிலீஸ் தேதி மாற்றத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் ரஜினி படம் தீபாவளி ரிலீஸை மிஸ் செய்துள்ள நிலையில் அந்த தேதியை விஜய்யின் ‘தளபதி 61’ பிடித்துகொண்டது. ஸ்ரீதேனாண்டாள் பிலிஸ் நிறுவனம் நேற்றிரவு அறிவித்த அறிவிப்பின்படி இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதியும், பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதமும் தீபாவளியில் படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே துப்பாக்கி, கத்தி படத்தை அடுத்து தீபாவளி தினத்தில் வெளிவரும் இன்னொரு படமாக ‘தளபதி 61’ அமைந்துள்ளது.