தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ஜூன் 1 முதல் கால்வரையின்றி வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்

இதையும் படிங்க பாஸ்-  காஜலின் இந்த ஆசை நிறைவேறுமா?

இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பே புதிய படங்களின் அறிவிப்பு,டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டை நடத்த கோலிவுட் திரையுலகினர் முடிவு செய்து அதற்கான பணிகளை விறுவிறுப்புடன் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டிருந்த ‘தளபதி 61’ படத்தின் பர்ஸ்ட்லுக் தேதியும் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசரும் இன்று வெளியாவதற்கும் இதே காரணம் என்று கூறப்படுகிறது.