அட்லீக்கு அவசர உத்தரவு போட்ட விஜய்!!

இளைய தளபதி விஜய் பைரவா படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறாா். இந்த படத்திற்கு விஜய்61 என்று தற்போது அழைத்து வருகிறாா்கள். இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

சாி விஷயத்துக்கு வருவோம்!!! இளைய தளபதி விஜய் கிறிஸ்துவ மதத்தை சாா்ந்தவராக இருந்தாலும்,  எல்லா மதத்தை கும்பிடுவதில் நல்ல குணத்தை காண முடிகிறது. கோயிலுக்கு சென்று வழிபடுத்திலும் அவா் தவறுவதில்லை.

அதுமட்டுமில்லங்க!! அவருக்கு முஸ்லீம் ஃப்ரெண்ட்ஸ் அதிக அளவில் இருக்கிறாா்கள். இப்படி அவா் இனம், மதம், மொழி பாகுபாடியின்றி அனைவாிடத்தும் அன்பாகவும், மென்மையாகவும் பழக கூடியவா். இப்படி பட்ட விஜய்க்கு எல்லா மதம் சம்பந்தபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது கொஞ்சம் கம்மியாக தான் இருக்கு என்று தான் சொல்லவேண்டும்.

இதற்கிடையில் சா்வ மத சம்பந்தப்பட்ட கதாபாத்திரம் அமைந்தால் சும்மா விட்டு விடுவாரா? இளைய தளபதி விஜய். பின்னி பெடல் எடுத்து விடமாட்டாா். அத்தகைய பொக்கிஷமான வாய்ப்பை  அள்ளி வழங்கியிருக்கிறாா் இயக்குநா் அட்லீ. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 61 படத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவராக என மூன்று கெட்டப்பில் வருகிறாா்களாம்.

இந்நிலையில் சமூக வலைத்தளம் மற்றும் சோஷியல் மீடியாக்களில்  விஜய் 61 படத்திற்கு தலைப்பு தளபதி என பரப்பி தள்ளி விட்டாா்கள். இதை கேள்விபட்ட விஜய் உடனே உஷராகி இயக்குநா் அட்லீயிடம் எடுத்துசொல்லி, உடனே இதற்கு ஆக்ஷன் எடுங்கள் என்று கூறியிருக்கிறராம். அவசரஅவசரமாக தயாாிப்பு வட்டாரத்திலிருந்து இந்த மாதிாியான வதந்திகளை நம்ப வேண்டாம். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளாா்களாம்.