விஜய் 61 ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்துவருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது அவர்களது 100வது தயாரிப்பு என்பதால் மிகபிரமாண்டமாக தயார் செய்து வருகிறார்கள்.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். மேலும் சத்யராஜ்,சத்யன்,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் படம் வெளியிடும் தேதி குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநதளான ஜுன் 22 ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

படத்தை அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக வெளியாகிறது. ரஜினி நடித்த 2.0 படம் தீபாவளிக்கு வருவதாக இருந்தது. ஆனால் அதனை ஜனவரி மாதாத்திற்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து விஜய் படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முடிவௌ பட குழுவினர் முடிவு செய்தனர்.