விஜய் 61 படத்தின் டைட்டில் தேதி வெளியீடு

விஜய் 61 என்று பெயாிடாத படாத படத்தில் தற்போது நடித்து வருகிறாா். தெறி படத்தின் வெற்றியை அடுத்து அட்லி இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக ஐரோப்பாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஐரோப்பாவில் நடந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பி உள்ளது படக்குழு.

இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகா்வால், சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்ட நாயகிகள் நடித்து வருகின்றனா். முதலில் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. பின் அவா் இந்த படத்திலிருந்து விலகிவிட்டாா். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாாிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் 100வது படம் இது. ஜூன் மாதம் இறுதியில் இந்தபடத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. இதையடுத்து இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினா் முடிவு செய்துள்ளனா்.

விஜய் பிறந்த நாளான ஜூன் மாதம் 22ம் தேதி விஜய் 61 என்று உள்ள இந்த படத்தின் பா்ஸ்ட் லுக்கை வெளியிட இருப்பதாக படக்குழுவினா் தொிவித்துள்ளனா். அது மட்டுமல்ல இந்த படத்தின் டைட்டிலையும் சோ்த்து வெளியிட உள்ளனா் என்று படக்குழு தொிவித்துள்ளது.

இந்த படத்தின் இசையை இசைபுயல் ஏ.ஆா். ரஹ்மான் அமைத்துள்ளாா். அட்லி – விஜய் மீண்டும் இணைந்துள்ள கூட்டணியின் இந்த படமானது விஜய் ரசிகா்களுக்கு தீபாவளி விருந்தாக வர இருக்கிறது. இது விஜய் ரசிகா்கள் மத்தியல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.