இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 61’ படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு வீரனாக முறுக்குமீசை தாடியுடன் காட்சியளிக்கும் விஜய் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் வேற லெவலில் உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ‘மெர்சல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்த டைட்டில் மெர்சலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ என்ற டைட்டில் வெளியான சில நிமிடங்களில் இந்த டைட்டில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒருசில நிமிடங்களில் இந்த டைட்டில் உலக அளவில் டிரெண்ட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.