விஜய் 62 பட டைட்டில் வெளியானது

vijay 62

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 62 பெயரிடப்படாத படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, கத்தி வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்த்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடாத நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்ட்டது.

vijay

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விஜய் படத்திற்கு சர்கார் என்று பெயர் வைக்கப்ட்டுள்ளது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நம்ம இளைய தளபதி விஜய் மாஸாக இருக்கிறார். புது கெட்டப்பில் வாயில் சிகெரட் இருப்பது போல உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷியில் தள்ளியுள்ளது.

படத்தின் தலைப்பை பார்க்கும் போதே இது நிச்சயம் அரசியல் சம்பந்தபட்டதாக இருக்கும் என்று பேசப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.