விஜய் மொ்சல் படத்தை அடுத்து ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். தளபதி 62 படத்தை பற்றி விஷயங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக உலா  வந்துக்கொண்டிருக்கிறது. இவருடைய படம் பற்றி தகவல்கள் வலைத்தளபக்கத்தில் வெளியாகி வருவது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது.

தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இந்த படத்தை பற்றிய விஷயம் ஒன்று வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால் விஜய் படத்துடன் உள்ள காப்பி கப் தான் தற்போதைய டிரெண்டாக வந்துள்ளது. பிரபல ஓட்டல் ஒன்றில் விஜய், கீர்த்தி சுரேஷ் படங்களுடன் கூடிய கப்பில் தான் காபி தருகின்றனா். இந்த செய்தி வெளிய பரவியதால் ஒரே நாளில் அந்த ஓட்டல் மிகவும் பிரபலமடைந்து விட்டது. அதோடு நிற்காமல் அவரது ரசிகபெருமக்கள், #coffeecupFromThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரிலும் டிரெண்ட்டாகி வருகிறது.

இந்த புதிய முயற்சியான விஜய் படத்துடன் கூடிய காப்பி கப்பை அறிமுகப்படுத்திய அந்த ஓட்டல் உரிமையாளா் விஜய் ரசிகா் என்பதால், தனது வாடிக்கையாளா்களுக்காக இந்த புதிய டிரெண்டை கொண்டு வந்ததாகவும், இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.