இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்தின் கொல்கத்தா மற்றும் சென்னை படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பாக தரமணியில் உள்ள ஸ்டுடியோவில் ஒருசில நாட்கள் மட்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, அந்த படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.