விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். பொதுவாக பெரிய நடிகர்கள் படம் என்றாலே ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்து விடுவார்கள். தங்கள் செல்போனில் வீடியோ எடுப்பதும் வழக்கம். இதில் ஷங்கர், முருகதாஸ் போன்ற சில இயக்குனர் படப்பிடிப்பு தளங்களில் செல்போன் பயன்படுத்த தடை செய்வார்கள். காரணம் சமூக வலைதளங்களில் படப்பிடிப்பு தளங்களில் நடைபெறும் காட்சிகளை வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நடிகர் விஜயின் 62வது படத்தின் ஷூட்டிங்கின் போது, ரசிகர் ஒருவர் செல்போனில் படம்பிடித்தார். அதனை கண்ட நடிகர் விஜய் நேராக அந்த ரசிகரிடம் சென்று, செல்போனில் பிடித்த அந்த காட்சிகளை 0டலிட் செய்யுமாறு கூறினார். இந்த காட்சி குறித்த காணொளி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.