Vijay 63 Tittle – அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு பற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையிலேயே நடைபெற்று வருகிறாது. இதுவரை 3 ஷெட்டியூல் முடிந்து விட்டது. தற்போது 4வது ஷெட்யூல் சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு, பிரம்மாண்டமான கால்பந்து விளையாட்டு மைதானம் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இப்படத்ற்கு சி.எம் என பெயர் வைக்கலாமா என அட்லீ யோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் அரசியல் தொடர்புடையதாகவே இருக்கிறது. அதனால் சி.எம் என யோசிக்க வேண்டாம். இப்படத்தில் விஜயின் பெயர் க்ளமெண்ட் மைக்கேல். அதனை சுருக்கி சி.எம் அன வைக்கப்பட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஆனாலும், அட்லீ இந்த பேரைத்தான் வைக்கப் போகிறாரா இல்லை வேறு ஏதும் வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.