தளபதி 63 என அழைக்கப்பட்டு வரும் விஜய்யின் அடுத்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் அட்லி காம்போவின் மூன்றாவது படமாக விஜய் 63 வேகமால்க வளர்ந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இன்னும் படப்பிடிப்பே முடியாத நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு 28 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடுமையானப் போட்டிகளுக்கு நடுவே இதனை சண்டிவி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் விஜய் படங்களுக்கு மிகப்பெரிய டி.ஆர்.பி. உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் மற்றும் மெர்சல் ஆகியப் படங்கள் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பட்டபோது சாதனைகள் புரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பெயரிடப்படாத இந்த படத்துக்கு சி.எம் எனப் பெயர் வைக்கலாமா என படக்குழு யோசித்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.