Vijay 63 Shooting spot : விஜய் 63 படப்பிடிப்பு தடத்தில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்ஸ் மற்றும் எஸ்.ஆர். ஏம் கல்லூரி வளாகம் என சில இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பு தளங்களில், நடிகர் விஜயை காண அவரின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அங்கு வருகின்றனர். இது படப்பிடிப்பு குழுவினருக்கும் பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் கூட படப்பிடிப்பு முடிந்து காரில் செல்லும் விஜயை அவரின் ரசிகர்கள் ‘தலைவா..தலைவா’ என கத்திக்கொண்டே இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ வெளியானது. அப்போது அவர்களை கலைந்து செல்லுங்கள் என விஜய் அறிவுரை கூறினார்.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தன்னை பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை அருகில் நெருங்கி விஜய் கை அசைக்கிறார். அதில் பரவசம் அடையும் ரசிகர்கள் தடுப்பை மீது மோத அது கீழே சாய்கிறது. இதனால் பதட்டம் அடைந்த விஜய் தடுப்பை பிடிக்க முயல்கிறார். அவரது அருகில் இருந்த பலரும் தடுப்பை தாங்கி பிடிக்கின்றனர். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.