‘சாவித்ரி’ படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய்?

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது.

இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷ், ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் மற்றும் பத்திரிகையாளரும் சாவித்ரியின் தோழியுமான கேரக்டரில் சமந்தா ஆகியோர்களும் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா என்ற நடிகர் நடிக்கவுள்ளாராம். இவர் தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தமிழுக்கு புதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாக இயக்குனர் நாக்-அஸ்வின் கூறியுள்ளார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ தெலுங்கில் மகாநதி’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் இன்றைய இளையதலைமுறையினர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.