விஜய் தற்போது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்ப்பிடிப்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் விஜய் நடித்த முந்தைய படமான ‘மெர்சல்’ திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது படத்திலும் விஜய் நடிக்கவுள்ளார்

விஜய்யின் 64வது படத்தை சூப்பர்குட் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் 100 படங்கள் நடிப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் 64 படங்கள் நடிப்பதற்கு இரண்டு நிறுவனங்களின் 100வது படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.