இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது.

கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அது தனுஷ் நடிக்கும் படமா அல்லது ரஜினி நடிக்கும் படத்துக்கான திரைக்கதையா என்பது மர்மமாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் பிசியாக இருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  காலாவை கதறவிட்ட தமிழ் ராக்கர்ஸ்: முதல் ஷோ முடிவதற்குள் வெளியீடு!

ஆனால் இந்நிலையில் விஜய்யை வைத்து ஒருப் படம் எடுக்க இருப்பதாக தகவல் உலாவர ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்தப் படம் விஜய் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படமல்ல. மாறாக கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் படமாம். இது சம்மந்தமாக சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் விஜய்யை சந்தித்து இது குறித்து பேசியுள்ளதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியின் மீசை வைத்த பேட்ட லுக் புதிய லுக்தானா

ஆனால் விஜய் இதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.