வெகுவிரைவில் விஜய்யின் ‘போக்கிரி 2’: ரசிகர்கள் உற்சாகம்

இளையதளபதி விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘போக்கிரி’ திரைப்படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல். இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி அவரை தொடர்ச்சியாக ஆக்சன் நாயகனாக மாற்றியது.

மேலும் இந்த படம் இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‘வாண்டட்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தியிலும் இந்த படத்தை பிரபுதேவாவே இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த போனிகபூர், விரைவில் ‘வாண்டட் 2’ படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்திலும் சல்மான்கான், பிரபுதேவா ஆகியோர் பணிபுரிவார்கள் என்றும் கூறியுள்ளார். இந்தியில் இந்த படத்தை இயக்கி முடித்தவுடன் பிரபுதேவா, தமிழிலும் ‘போக்கிரி 2’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.